Thursday, October 15, 2009

பயிற்றுவிக்கும் முறைகள்


அறிவினை விரிவுசெய் - பாரதிதாசன்


அறிவினை பகிர்ந்து கொள் - அப்துல் கலாம்


விரிவுரை

வகுப்பறைகளிலும், பொது மேடைகளிலும் தொன்று தொட்டு பயன்படுத்திவரும் பயிற்றுவிக்கும் முறை விரிவுரை என்பதை நாம் அறிவோம். இம் முறை பயிற்சிகளின் போது பங்கேற்பாளர்களிடையே அறிவு மற்றும் மனோபாவ மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் என பயிற்றுநர்கள் கருதுகின்றனர்.

சிறந்த உடல்மொழியுடன் கூடிய பேச்சுத் திறன் உள்ளவர்கள் இம்முறையை  சிறப்பாக கையாள முடியும் என்ற கருத்தும் நம்பிக்கையும் உண்டு. விரிவுரையை செழுமைபடுத்த அல்லது சிறப்பாக கையாள சில பயிற்சி உபகரணங்களை பயன்படுத்துவோரும் உண்டு.


ஜானகிராமனிடமிருந்து....

விரிவுரை என்பதை பிரித்தால் விரிவு + உரை என்ற பொருள் தரும். விரிவு என்ற சொல்லுக்கு,விரிவான என பொருள் தரலாம். விரிவான என்றால், விளக்கமான - கருத்தை விளங்கச் செய்கின்ற என்ற விளக்கம் நமக்கு கிடைக்கும். ஆக விரிவுரை என்பது, ஒரு நபர் மட்டும் தமக்கு தெரிந்த கருத்தை பார்வையாளருக்கு விளங்கிக்கொள்ளும் வகையில் விளக்கமாகவும் விரிவாகவும் நிகழ்த்தும் உரை எனலாம்.
நமது பணிசுழலில் விரிவுரை என்ற வார்த்தையை பயன்படுத்துவது முறையற்றது என்பது எனது எண்ணம்.